ஏரல் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை திருமணம் தள்ளிப்போனதால் சோக முடிவு


ஏரல் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை திருமணம் தள்ளிப்போனதால் சோக முடிவு
x
தினத்தந்தி 21 Nov 2018 3:00 AM IST (Updated: 21 Nov 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே சரியான வரன் அமையாமல் திருமணம் தள்ளிப்போனதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏரல், 

ஏரல் அருகே சரியான வரன் அமையாமல் திருமணம் தள்ளிப்போனதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண்

ஏரலை அடுத்த திருவழுதிநாடார்விளை 2-வது முடுக்கு தெருவைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 53). இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள் தீபா (22). இவருக்கு திருமணம் செய்வதற்காக கடந்த ஒரு ஆண்டாக பெற்றோர் வரன் பார்த்து வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

அவருக்கு சரியான வரன் அமையாததால், திருமணம் தள்ளிப் போய் வந்தது. இதனால் மனமுடைந்த தீபா மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த தீபாவின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்துக்கு சரியான வரன் அமையாததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story