சர்வதேச குழந்தைகள் தினத்தையொட்டி கையெழுத்து இயக்கம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்
சர்வதேச குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
மாநில குழந்தைகள் பாதுகாப்பு நல ஆணையத்தின் உறுப்பினர் ராமநாதன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.
பின்பு அனைவரும் குழந்தைகள் நலனுக்கான உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்பு, அங்குள்ள வளாகத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் ஜெயகாந்தன் தொடக்கி வைத்தார்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் செல்வக்குமாரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஜெயபிரகாஷ், தாசில்தார் ராஜா உள்பட அரசு அலுவலர்கள், அரசனூர் பாண்டியன் சரசுவதி கல்வியியல் கல்லூரி, மைக்கேல் கல்வியியல் கல்லூரி, சோழபுரம் சாந்தா கல்வியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.