தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டனர்
தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
தஞ்சாவூர்,
கஜா புயலுக்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை உள்ளிட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. வீடுகள் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
அப்போது சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். தேங்கியுள்ள கழிவு நீர் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும். விரைவில் மின்வினியோகம் வழங்க வேண்டும். மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.
இதை தொடர்ந்து அதிராம்பட்டினம் கடற்கரை, தம்பிக்கோட்டை கடற்கரை பகுதிகளுக்குட்பட்ட பர்மா காலனி, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் மற்றும் பேராவூரணி கடற்கரை பகுதியில் நடைபெற்ற நிவாரண பணிகளை பார்வையிட்டனர்.
முன்னதாக பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நிவாரண பொருட்களை 34 நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் 5 முகாம்களுக்கு ஒரு வாகனம் மூலம் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்களை பல்வேறு கிராமங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது சி.வி. சேகர் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story