வானவில் : ஐ-போன் கேமரா
பொதுவாக ஸ்மார்ட்போனில் எடுக்கும் புகைப்படங்கள் தொழில்முறை கேமராவில் எடுக்கப்பட்ட அளவிற்கு துல்லியமாக அதேசமயம் சிறப்பாக வருவது கிடையாது.
மேலும் செல்போனில் எடுக்கும் புகைப்படங்களை பிரிண்ட் போடுவது மிக மிகக் குறைவு. இதனாலேயே ஒரு புகைப்படத்தின் ஆயுள் அடுத்த புகைப்படம் எடுக்கும் வரைதான். ஆனால் ஸ்மார்ட்போனிலேயே கேமராவை இணைத்து படம் எடுக்க முடியும்.
டி.எக்ஸ்.ஓ. ஒன் டிஜிட்டல் கனெக்டட் கேமரா ஐ-போனில் இணைத்து செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது 20 மெகா பிக்ஸெல் கேமராவைக் கொண்டுள்ளது. இதை ஐ-பேடிலும் இணைத்து செயல்படுத்த முடியும். இதன் கேமரா ஷட்டர் ஸ்பீடு ஒரு வினாடியில் 20 ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்திற்குள் செயல்படும்.
இதில் சி.எம்.ஓ.எஸ்.பி.எஸ்.ஐ. சென்சார் உள்ளது. இதில் ரீசார்ஜ் செய்யக் கூடிய லித்தியம் பேட்டரி உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்டு போட முடியும். இதனுடன் 8 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்டும் அளிக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட புகைப்படங்களை மற்றவர்களுக்கு ஐ-போன் மூலம் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு அனுப்ப முடியும். அறிமுகத்தின் போது இதன் விலை ரூ. 35,865. இப்போது ரூ. 22,070-க்கு அமேசான் இணையதளத்தில் கிடைக்கிறது.
Related Tags :
Next Story