திண்டுக்கல்லில், சாலையோரத்தில் விற்க வைத்திருந்த அரியவகை சிட்டுக்குருவிகள் பறிமுதல்: சேலம் மூதாட்டி கைது


திண்டுக்கல்லில், சாலையோரத்தில் விற்க வைத்திருந்த அரியவகை சிட்டுக்குருவிகள் பறிமுதல்: சேலம் மூதாட்டி கைது
x
தினத்தந்தி 22 Nov 2018 3:15 AM IST (Updated: 21 Nov 2018 11:19 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் சாலை யோரத்தில் விற்பனைக்கு வைத்திருந்த 48 அரியவகை சிட்டுக்குருவிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சேலம் மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே அரிய வகை சிட்டுக் குருவிகளை, ஒரு பெண் விற்பனை செய்வதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறு மலை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறை யினர் திண்டுக்கல் பஸ்நிலைய பகுதிகளில் சோதனை நடத்தி னர். அப்போது ஏ.எம்.சி. சாலை ஓரத்தில் ஒரு மூதாட்டி கூண்டுகளில் சிட்டுக்குருவி களை விற்பனைக்கு வைத்திருந் ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த மூதாட் டியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த முனுசாமி மனைவி ராமாயி (வயது 70) என்பதும், அரிய வகையான ‘முனியாஸ்’ இன சிட்டுக்குருவிகளை அவர் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த வனத் துறையினர், 48 சிட்டுக்குருவி களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையி னர் கூறுகையில், ‘முனியாஸ்’ வகை சிட்டுக்குருவிகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் தான் இருக்கும். ஆனால், மூதாட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை பல்வேறு வண்ணங்களில் இருந்தன. அதுபற்றி ஆய்வு செய்த போது, சிட்டுக்குருவிகள் மீது செயற்கையாக பல்வேறு வண்ணம் சேர்க்கப்பட்டது தெரியவந்தது.

எனவே, வாடிக்கையாளர் களை கவரும் வகையில் சிட்டுக் குருவிகளின் மீது பல் வேறு வண்ணங்களை சேர்த்து ஒரு ஜோடி ரூ.150 வரை விற்றுள் ளார். மேலும் மதுரையில் இருந்து சிட்டுக்குருவிகளை வாங்கி வந்ததாக மூதாட்டி தெரிவித்தார். மதுரையில் யாரிடம் அந்த சிட்டுக்குருவி களை வாங்கினார். எந்த வனப் பகுதியில் அவை பிடிக்கப்பட் டன? என்பது குறித்து விசாரித்து வருகிறோம், என்றனர்.

Next Story