சிங்கபெருமாள் கோவிலில் பலத்தமழை


சிங்கபெருமாள் கோவிலில் பலத்தமழை
x
தினத்தந்தி 23 Nov 2018 4:30 AM IST (Updated: 22 Nov 2018 10:20 PM IST)
t-max-icont-min-icon

சிங்கபெருமாள் கோவிலில் பலத்தமழை பெய்தது.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பலத்தமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையில் சிங்கபெருமாள் கோவில் பஜார் வீதியில் உள்ள சர்வீஸ் சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை சிங்கபெருமாள் கோவிலில் மழைநீர் தேங்கியது.

இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணி மேற்பார்வையாளர் ராஜா தலைமையிலான ஊழியர்கள் 4 வழி சாலை நடுவில் இருந்த தடுப்புச்சுவரை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர்.

சாலையோரம் உள்ள கால்வாய்கள் சரிவர மூடப்படாததால் அந்த வழியாக சென்ற பொதுமக்களில் ஏராளமானோர் கால்வாயில் விழுந்தனர். மழை காரணமாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

மழையால் திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம், செட்டிபுண்ணியம், புலிப்பாக்கம் போன்ற ஏரிகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதது. செங்கல்பட்டு, ஆலப்பாக்கம், ஆப்பூர், பரனூர், வில்லியம்பாக்கம், வல்லம், நென்மேலி, பொன்விளைந்த களத்தூர், ஒழலூர், வில்லியம்பாக்கம், பாலூர், அனுமந்தபுரம், கொண்டமங்களம், கொளத்தூர், தெள்ளிமேடு, அஞ்சூர், சாத்தனஞ்சேரி, ஆத்தூர், தென்மேல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

Next Story