தமிழக அரசு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்குமா என்பது கேள்விக்குறி தான் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘கஜா’ புயல் பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்குமா என்பது கேள்விக்குறி தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சி,
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு தி.மு.க. சார்பில், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இருந்து 100 லாரிகளில் ரூ.4 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து அனுப்பிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரிகள், டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம் மற்றும் திருச்சி சிவா எம்.பி., திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர், நிருபர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், “இந்தப் பொருட்களை எல்லாம் கொடுத்திருக்கக்கூடிய, கொடுத்து உதவ இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் குறிப்பாக அந்தப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு அது சிறப்பாக தொடர்ந்து நிறைவேற்றி கொண்டிருக்கக்கூடிய தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு, நிர்வாகிகளுக்கு, செயல்வீரர்களுக்கு எல்லாம் நான் இந்த நேரத்திலே தி.மு.க. சார்பிலே என்னுடைய பாராட்டுகளை, நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
ரூ.15 ஆயிரம் கோடி நிதி கிடைக்குமா?
கேள்வி:- தமிழக அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் கோடி கேட்கப்பட்டுள்ளது. அது பற்றி தங்களின் கருத்து?.
பதில்:- ‘கஜா’ புயல் பேரிழப்பு ஏற்பட்டவுடன் மத்திய அரசு உடனடியாக முன் பணம் வழங்கியிருக்க வேண்டும். அப்படி வழங்கவில்லை. மாநில அரசு ஆய்வு அறிக்கை தாக்கல் செய்து, அதன் பின்பு தான் உதவி வழங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. போர்க்கால அடிப்படையில் நிச்சயமாக முன்கூட்டியே கொடுத்திருக்க வேண்டும்.
இன்னமும் சொல்லப்போனால், ஏற்கனவே, இதே தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகின்ற நேரத்தில் ‘தானே’ புயல், ‘வர்தா’ புயல், ‘ஒக்கி’ புயல் எல்லாம் வந்தது. இந்தப் புயல்களுக்கு எல்லாம் மொத்தமாக சேர்த்து இப்போது இருக்கக்கூடிய ஆட்சி மாநில அரசின் சார்பில் மத்திய அரசிடம் கேட்கப்பட்ட நிதி எவ்வளவு என்று கேட்டீர்கள் என்றால், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 573 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், மத்திய அரசு வழங்கியது ரூ.2,012 கோடிதான். இதுதான் இருக்கக்கூடிய நிலை, இப்போது மாநில அரசின் சார்பில் ரூ.15 ஆயிரம் கோடி கேட்கப்பட்டு உடனடியாக வழங்கவேண்டும் என்று சொல்கிறார்கள். கடந்த கால வரலாற்றை எல்லாம் பார்க்கின்ற போது, அதை நிச்சயமாக வழங்குவார்களா என்பது ஒரு கேள்விக்குறியாகத்தான் உள்ளது. வழங்கினால் சிறப்பாக இருக்கும், வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
5 மணி நேரத்தில் ஆய்வு
கேள்வி:- தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் இதே நிலைதான் இருந்தது, அவர்கள் கேட்டது அனைத்தையும் வாங்கி வரவில்லை, என்ற கருத்துக்கு உங்களின் பதில்?.
பதில்:- தி.மு.க. ஆட்சி கடந்து ஏறக்குறைய 10 வருடங்கள் ஆகப்போகிறது. இன்னும் அதே பல்லவி தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், தி.மு.க. ஆட்சியில் இருந்து சென்றபோது வாங்க முடியவில்லை, நாங்கள் சென்ற போதும் வாங்க முடியவில்லை என்று முதல்-அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறாரா? என்பது தான் என்னுடைய கேள்வி.
கேள்வி:- வான் வழியாகப் பார்த்தால் மட்டும் தான் மக்களின் துயரத்தை உணர்ந்துகொள்ள முடியும் என்று முதல்- அமைச்சர் கூறியிருக்கிறார். அதுபற்றி தங்களின் கருத்து?.
பதில்:- அதாவது ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ததாக அவரே ஒப்புக்கொள்கிறார். எனவே, இதுநாள் வரையில் 5 நாட்களாக அமைச்சர்கள் தான் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் இங்கு தான் இருக்கிறார்கள். அவர்கள் ஆய்வு எதுவும் செய்யவில்லையா?. முதல்-அமைச்சர் திடீரென்று ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்து விட்டு 5 மணி நேரத்தில் ஆய்வு நடத்தி முடித்துவிட்டு சென்று சொல்லியிருக்கிறாரா? இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது, நம்ப முடியவில்லை.
ஒப்புதல் வாக்குமூலம்
கேள்வி:- தி.மு.க. காலத்தில் புயல் வந்தபோது ரூ.2 லட்சம் தான் கொடுத்தார்கள், நாங்கள் ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறோம், ஆனாலும் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளாரே?.
பதில்:- அது நடந்தது 10 வருடத்திற்கு முன்பு, அப்போதிருந்த விலைவாசி பொருளாதார சூழ்நிலை வேறு, இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலை வேறு. தரமாட்டோம் என்று சொல்லாமல், ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தந்து கொண்டிருக்கிறார் என்பது தான் என்னுடைய கணிப்பு.
கேள்வி:- ‘கஜா’ புயலைப் பொறுத்த வரையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், இது மக்கள் பிரச்சினை என்று கூறுகின்றனரே?.
பதில்:- தி.மு.க. தயாராக உள்ளது. அவ்வாறு, தயாராக இருக்கின்ற காரணத்தினால் தான் முதல் அறிவிப்பை தி.மு.க. அறிவித்தது மட்டுமில்லாமல், நிவாரணத்தொகையை தபால் மூலம் அனுப்பியிருக்கலாம், எனவே, அரசியல் பார்க்காமல் நேரடியாகச் சென்று முதல்-அமைச்சரை சந்தித்து நிவாரண தொகை கொடுத்தோம். நேரடியாக வந்து இந்தப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போதும் முதல்-அமைச்சர் டெல்லி செல்வதற்கு முன்பு உடனடியாக என்ன செய்திருக்க வேண்டும், இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடிய விவசாயிகளை, மீனவர்களை அங்கிருக்கக்கூடிய பொது நலச்சங்கங்களை அதேபோல் அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து உட்கார வைத்து என்ன சூழ்நிலை? எவ்வளவு பாதிக்கப்பட்டு சேதாரம் ஏற்பட்டுள்ளது? என்ன நிலைமை? என்பதை ஒரு கணக்குப்போட்டு அவர்களுடைய கருத்துகளையும் கேட்டுக்கொண்ட பிறகு ஒரு முடிவெடுத்தபிறகு அவர் சென்றிருந்தார் என்றால் சிறப்பாக இருந்திருக்கும்.
அந்தப் பணியை செய்வதற்கு இந்த ஆட்சிக்கு யோக்கியதை இல்லை அருகதை இல்லை - நிர்வாகத் திறமை இல்லை. ஆனால், இப்படி குறைகளை சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.
விவசாயிகள் தற்கொலை
கேள்வி:- மு.க.ஸ்டாலின் மக்களை தூண்டிவிட்டு, எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்கிறார் என்று தம்பிதுரை சொல்லியிருப்பது பற்றி உங்களின் கருத்து?.
பதில்:- இதில் அரசியல் செய்வதற்கு நான் விரும்பவில்லை. இது மக்கள் பிரச்சினை இதில் கட்சியினுடைய பிரச்சினைகளை எல்லாம் பேசுவதற்கு தயாராக இல்லை.
கேள்வி:- புயலுக்கு பிறகும் அங்கு இருக்கக்கூடிய விவசாயிகள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். நேற்றைக்கு வாழை விவசாயி ஒருவர், இன்றைக்கு தென்னை விவசாயி ஒருவர் என்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். புயலுக்கு பிறகும் அவர்களின் துயரம் நீடித்துக் கொண்டே இருக்கிறதே?.
பதில்:- ஏற்கனவே இதே ஆட்சியிலே விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார்கள். அது தற்கொலை இல்லை நோய் வந்து இறந்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள், இப்போதும் அது தான் சொல்லுவார்கள். இதைத்தான் எதிர்பார்க்கிறது அந்த ஆட்சி.
இணக்கமான செயல்பாடு எப்படி?
கேள்வி:- அ.தி.மு.க. - பா.ஜ.க.வோடு இணக்கமாகச் செயல்படுகிறது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறீர்கள். ஆனால் நிதி கொடுப்பதில் மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?.
பதில்:- இணக்கமாக செயல்படுகிறது என்றால், செய்து கொண்டிருக்கிற ஊழலுக்கு, செய்து கொண்டிருக்கிற கலெக்சனுக்கு, கமிசனுக்கு, கரப்சனுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது. அதற்காக இவர்கள் இணக்கமாக செயல்படுகிறார்கள். அதுதான் விஷயம், இணக்கமாக செயல்படுவது என்பது என்னவென்றால், கேட்ட நிதியை போராடி, வாதாடி வாங்கி வரவேண்டும். அதுதான் இணக்கமாக செயல்படுவது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Tags :
Next Story