வீடு தோறும் நூலகம் அமைக்க வேண்டும்: கலெக்டர் யோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் வீடு தோறும் நூலகம் அமைக்க வேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி யோசனை தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வீடு தோறும் நூலகம் அமைக்க வேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி யோசனை தெரிவித்து உள்ளார்.
இளம் படைப்பாளர் விருது
தூத்துக்குடியில் 51-வது தேசிய நூலக வார விழா தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு வட்ட மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற 36 மாணவ, மாணவிகளுக்கு இளம் படைப்பாளர் விருதுக்கான சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
வாசிக்கும் பழக்கம்
பின்னர் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது;-
தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 51-வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகள் சிறுவயதில் இருந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் அமைக்க வேண்டும். நாள்தோறும் குறைந்தபட்சம் அரை மணி நேரம் தினசரி நாளிதழ்கள், புத்தகங்கள் வாசிக்க வேண்டும்.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெற பொது அறிவு மற்றும் அன்றாட நாட்டு நடப்பினை தெரிந்துகொள்ள வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க உறுதுணையாக இருக்க வேண்டும். பள்ளி பருவத்தில் நன்றாக படித்து எதிர்காலத்தில் சிறந்த நிலையை அடைய புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவ, மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர், மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் பேராசிரியர் பாலமணிவண்ணன், மாவட்ட மைய நூலகர் சங்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story