ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் உண்ணாவிரத போராட்டம்


ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2018 3:30 AM IST (Updated: 23 Nov 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்கக்கோரி நெல்லையில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்கக்கோரி நெல்லையில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில், 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு வழங்கக்கோரி நேற்று நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு நெல்லை மாவட்ட தலைவர் சம்மனசு தலைமை தாங்கினார். மத்திய-மாநில பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், நெல்லை மாவட்ட செயலாளருமான சண்முகசுந்தரராஜ் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மத்திய சங்க துணை செயலாளர் எஸ்.அருணாசலம் கோரிக்கையை விளக்கி பேசினார்.

இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கோமதி சங்கர், ஜெயராமன், பி.அருணாசலம், சூசை மரிய அந்தோணி, கணேசன், நயினார், ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மாநில அமைப்பு செயலாளர் கனகராஜ் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார்.

இதில் கணபதிராமன், மாவட்ட துணை செயலாளர் பரமசிவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோரிக்கை மனு

போராட்டம் முடிவில், கோரிக்கை மனுவை பொது மேலாளர் முருகானந்தத்திடம் வழங்கி, தொலை தொடர்பு துறை செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Next Story