வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது
தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு விற்பனையாளர், மேற்பார்வையாளர், மார்க்கெட்டிங் மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பணி நியமன ஆணை வழங்கவுள்ளனர். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலை வாய்ப்பற்ற 8, 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story