கடையம் அருகே பரிதாபம் பன்றிக்காய்ச்சலுக்கு பள்ளிக்கூட நிர்வாகி பலி
கடையம் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு பள்ளிக்கூட நிர்வாகி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை,
கடையம் அருகே பன்றிக்காய்ச்சலுக்கு பள்ளிக்கூட நிர்வாகி பரிதாபமாக இறந்தார்.
பள்ளிக்கூட நிர்வாகி
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கோவிலூற்று கிராமத்தை சேர்ந்தவர் வேலவன் (வயது 45). இவர் அருகில் உள்ள பூலாங்குளம் கிராமத்தில் அமைந்திருக்கும் நடுநிலைப்பள்ளியை நிர்வகித்து வந்தார்.
இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் காணப்பட்டது. இதையொட்டி அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை.
ஆஸ்பத்திரியில் சாவு
இந்த நிலையில் வேலவனுக்கு ரத்த மாதிரி பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் வேலவனை உறவினர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் பன்றிக்காய்ச்சலுக்கு உரிய சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை வேலவன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மீண்டும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story