கறம்பக்குடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்
கறம்பக்குடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக விவசாயிகள் கண் ணீர் விட்டு கதறி அழுதனர்.
கறம்பக்குடி,
தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிக்கு ஆய்வு செய்ய நேற்று மாலை வந்தார். பின்னர் அவர் மருதன்கோன் விடுதி நால்ரோடு, மூவர்ரோடு, செவ்வாய்ப்பட்டி, சுக்கிரன் விடுதி,
கறம்பக்குடி ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது கறம்பக்குடி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, சோளம், மா, பலா, தென்னை போன்றவை முற்றிலும் அழிந்து போனது என்று கூறி விவசாயிகள் கதறி அழுதனர்.மேலும் ஒரே நாள் இரவில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாய் நிற்பதாக சிலர் கண்ணீர் வடித்தனர். தொடர்ந்து வீடு மற்றும் உடைமைகளை இழந்த பொதுமக்களை சந்தித்து ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
அப்போது பொதுமக்கள் கடந்த 7 நாட்களாக உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி தவித்து வருவதாகவும், அரசின் நிவாரண உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் கூறினர். இதையடுத்து தி.மு.க. சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், விரைவில் உங்களுக்கும் தி.மு.க. சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் கூறினார்.
முன்னதாக தி.மு.க. தலைமையில் அனுப்பப்பட்ட அரிசி, பருப்பு, வேட்டி, போர்வை, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி சுருள், பிஸ்கட், பால்பவுடர் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் லாரியில் கறம்பக்குடி வந்தது. அவற்றை தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்தநிலையில் கந்தர்வகோட்டைக்கு வந்த மு.க.ஸ்டாலின் காரில் இருந்தபடியே பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து விட்டு தஞ்சை மாவட்டம் பேரா வூரணி சென்றார். பின்னர் மாலையில் அங்கிருந்து புளிச்சங்காடு கைகாட்டி, மாங்காடு, வடகாடு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி மனுக்கள் பெற்றார்.
தொடர்ந்து ஆலங்குடி வழியாக புதுக்கோட்டைக்கு வந்து, உசிலங்குளம் பகுதியில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டு அவர் களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் காரில் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார்.

Related Tags :
Next Story