செம்பரம்பாக்கம் ஏரியில் பெண் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை


செம்பரம்பாக்கம் ஏரியில் பெண் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 23 Nov 2018 3:30 AM IST (Updated: 23 Nov 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

ஏரியில் பெண் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த மேப்பூர் தாங்கல் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக மிதப்பதாக நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

இதுபற்றி நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்துவிட்டு உடலை ஏரியில் வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பெண்கள் மாயமானதாக புகார்கள் வந்து உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story