ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் சாவு: டிராக்டர் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை - அருப்புக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு


ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் சாவு: டிராக்டர் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை - அருப்புக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 Nov 2018 3:30 AM IST (Updated: 23 Nov 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

டிராக்டர் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் டிராக்டர் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து அருப்புக்கோட்டை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வீரசோழன் கிராமத்தை சேர்ந்த போஸ் என்பவர் தனது மனைவி பானுப்பிரியா, மகள் ஸ்ரீதேவி ஆகியோருடன் புதுக்குடி கிராமத்திலுள்ள உறவினர் வீட்டில் நடந்த காதணி விழாவுக்கு சென்றிருந்தார். விழா முடிந்து 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

வீரசோழன்-அபிராமம் மெயின்ரோட்டில் வந்தபோது எதிரே செங்கல் ஏற்றி வந்த டிராக்டர், அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து 7-4-2013 அன்று நடந்தது. இது குறித்து வீரசோழன் போலீசார் விசாரணை மேற்கொண்டு டிராக்டர் டிரைவரான நல்லிக்குறிச்சியை சேர்ந்த முருகனை (28) கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு அருப்புக்கோட்டை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி வசித்குமார் விசாரித்து டிராக் டர் டிரைவர் முருகனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Next Story