அயோத்தி பயணத்துக்காக சிவ்னேரி கோட்டைக்கு சென்று மண் எடுத்த உத்தவ் தாக்கரே


அயோத்தி பயணத்துக்காக சிவ்னேரி கோட்டைக்கு சென்று மண் எடுத்த உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 23 Nov 2018 5:00 AM IST (Updated: 23 Nov 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி பயணத்துக்காக சிவ்னேரி கோட்டைக்கு சென்று உத்தவ் தாக்கரே மண் எடுத்தார்.

மும்பை, 

அயோத்தி பயணத்துக்காக சிவ்னேரி கோட்டைக்கு சென்று உத்தவ் தாக்கரே மண் எடுத்தார்.

சிவாஜியின் பிறப்பிடம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று பா.ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில் வரும் 25-ந்தேதி அயோத்திக்கு தான் செல்ல உள்ளதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். அப்போது ராமர் கோவில் கட்டுவதில் தாமதம் குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்பேன் என்றும் தெரிவித்தார்.

இந்தநிலையில் நேற்று புனே மாவட்டம் ஜுன்னார் பகுதியில் உள்ள சத்ரபதி சிவ்னேரி கோட்டைக்கு ஹெலிகாப்டர் மூலம் உத்தவ் தாக்கரே சென்றார்.அயோத்தி பயணத்தையொட்டி சிவாஜியின் பிறப்பிடமாக கருதப்படும் அங்கிருந்து மண்ணை எடுத்துக்கொண்டு மும்பை திரும்பினார்.

இது குறித்து உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்துக்களின் உணர்வுகள்

சத்ரபதி சிவாஜி பிறந்த மண் இந்துக்களாக பிறந்த அனைவரின் உணர்வுகளையும் உள்ளடக்கியது. நான் அவர்களின் உணர்வுகளை சேகரித்துக்கொண்டு அயோத்தி செல்கிறேன். இது ராமர் கோவில் கட்டும் வேலையை துரிதப்படுத்தும்.

அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சினை ஒவ்வொரு தேர்தலின் போதும் எழுப்பப்படுகிறது. இன்னும் எத்தனை தேர்தல்களில் தான் ராமர் கோவில் கட்டப்படும் என்ற போலி வாக்குறுதியால் மக்கள் ஏமாற்றப்படு வார்கள். நான் அங்கு சென்று பார்வையிடவேண்டும் என்று விரும்புகிறேன். அதன்மூலம் நான் ஆசிர்வாதத்தை பெறுவேன். மேலும் சராயு நதிக்கரையில் நடக்கும் மாலை நேர பூஜையில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே உத்தவ் தாக்கரே அறிவிப்பை தொடர்ந்து நேற்று ஏராளமான சிவசேனா தொண்டர்கள் தானே ரெயில்நிலையத்தில் இருந்து தனி ரெயில் மூலம் அயோத்தி புறப்பட்டு சென்றனர்.

Next Story