புனேயில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை


புனேயில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 23 Nov 2018 4:30 AM IST (Updated: 23 Nov 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புனே, 

புனேயில் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மருத்துவ மாணவர்

புனே உருளி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். இவரது மகன் அனிகேத்(வயது22) அங்குள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் படிப்பதற்காக அவரது தந்தை அனிகேத்தை எழுப்பிவிட்டார். ஆனால் மீண்டும் அவர் கதவை பூட்டிக் கொண்டு படுத்துவிட்டார்.

பின்னர் 5 மணியளவில் மகனை எழுப்புவதற்காக அவரது தந்தை வந்து கதவை தட்டினார். வெகுநேரமாகியும் அனிகேத் கதவை திறக்கவில்லை.

தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு அனிகேத் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந் தார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அனிகேத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இருப்பினும் அதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story