ஆரணியில் விபத்து: நின்று கொண்டிருந்த பஸ் மீது ஆட்டோ மோதல் டிரைவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி


ஆரணியில் விபத்து: நின்று கொண்டிருந்த பஸ் மீது ஆட்டோ மோதல் டிரைவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 24 Nov 2018 4:15 AM IST (Updated: 23 Nov 2018 10:37 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் நின்று கொண்டிருந்த பஸ் மீது ஆட்டோ மோதியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆரணி, 

ஆரணி, தாது சாகிப் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 38), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு தச்சூர் சாலையில் இருந்து ஆரணி நோக்கி சென்றார். அப்போது அங்குள்ள அரசமரம் அருகே ஷூ கம்பெனிக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் பஸ் நின்று கொண்டிருந்தது. ஆட்டோ திடீரென பஸ் மீது மோதியது.

மோதிய வேகத்தில் ஆட்டோ டிரைவர் சேட்டு இருக்கையிலேயே அமர்ந்தவாறு சிக்கிக் கொண்டார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர் ஆனால் முடியவில்லை. இதுகுறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சேட்டுவை உயிருடன் மீட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


எனினும் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால், மோட்டார் சைக்கிளிலேயே ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் டிரைவர் சேட்டு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரணி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story