திருக்கழுக்குன்றம் அருகே கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
திருக்கழுக்குன்றம் அருகே கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கல்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த தத்தலூர் கிராமம் பாடசாலை தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 54). கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் பின்புறம் வருவாய் கால்வாய் உள்ளது. அதை கடந்து செல்ல மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கால்வாயில் தண்ணீர் நிரம்பியிருந்தது.
நேற்று முன்தினம் தனது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகைக்கு செல்வதற்காக ரங்கநாதன் அந்த மரப்பாலம் வழியாக சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி கால்வாயில் விழுந்து விட்டார். சிறிது நேரத்தில் மூச்சு திணறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விரைந்து சென்று ரங்கநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

Related Tags :
Next Story