அம்பை அருகே வங்கி ஊழியர் கொலையில் 5 சிறுவர்கள் கைது
அம்பை அருகே வங்கி ஊழியர் கொலையில் 5 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அம்பை,
அம்பை அருகே வங்கி ஊழியர் கொலையில் 5 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வங்கி ஊழியர் கொலை
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுடலை முத்துமணி மகன் இசக்கி சங்கர் (வயது 33). இவர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களக்காடு கிளையில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இசக்கி சங்கர் வழக்கம்போல் அந்த பகுதியில் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு குளித்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் ஆற்றங்கரையில் நடந்து வந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் அவரை சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் இசக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காதல் விவகாரம்
போலீசாரின் விசாரணையில், இசக்கி சங்கர் அதே ஊரில் உள்ள மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து உள்ளார். இவருடைய காதல் விவகாரம் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இசக்கி சங்கரை எச்சரித்தனர். அந்த பெண்ணிடம் இனிமேல் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று கூறினர்.
ஆனால் அதையும் மீறி இசக்கி சங்கர் அந்த பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்களில் சிலர் இசக்கி சங்கரை கொலை செய்தது தெரியவந்தது.
5 சிறுவர்கள் கைது
இந்த வழக்கு தொடர்பாக 5 சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் களை பாளையங்கோட்டை யில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
Related Tags :
Next Story