ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்
அடிப்படை வசதிகள் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி 12–வது வார்டு அருந்ததியர் காலனியில் 300–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் பல முறை மனு அளித்தும் பலன் இல்லை. மேலும் மம்சாபுரம் பேரூராட்சிக்கென நிரந்தரமான செயல் அலுவலர் இல்லாத நிலையில் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தங்களது பகுதியில் கடந்த மூன்று நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இதனையும் அலுவலர்கள் கண்டுகொள்ளாத நிலையில், நேற்று மாட்டிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட நிர்வாகம் உடனே செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்பி, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.