மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாள தளம் மறுசீரமைப்பு பணிக்காக ரெயில் இயக்கத்தில் மாற்றம்


மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாள தளம் மறுசீரமைப்பு பணிக்காக ரெயில் இயக்கத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 24 Nov 2018 4:15 AM IST (Updated: 24 Nov 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாள பகுதியில் உள்ள சிமெண்டு தளம் மறு சீரமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு சில ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை

 மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மதுரை ரெயில் நிலையத்தை அழகுபடுத்தும் திட்டத்தின்கீழ், ரெயில்நிலையத்தில் பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, மழைக்காலங்களில் தடையில்லாத ரெயில் போக்குவரத்துக்காக, 1–வது தண்டவாளத்தின் தளம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்க உள்ளது. இதனால் இன்று(சனிக்கிழமை) முதல் வருகிற 13–ந் தேதி வரை ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, மதுரை–பழனி பாசஞ்சர் ரெயில் இருமார்க்கங்களிலும் மதுரை–கூடல்நகர் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில்கள் கூடல்நகர் ரெயில்நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு இயக்கப்படும்.

மதுரை–செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் இருமார்க்கங்களிலும் மதுரை–விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் விருதுநகர் ரெயில்நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு இயக்கப்படும்.

மதுரை–விழுப்புரம் பாசஞ்சர் ரெயில் இருமார்க்கங்களிலும் மதுரை–திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு இயக்கப்படும்.

புனலூர்–மதுரை பாசஞ்சர் ரெயில் சுமார் அரைமணி நேரம் தாமதமாக மதுரை ரெயில்நிலையம் வந்தடையும்.

ராமேசுவரம்–மதுரை பாசஞ்சர் ரெயில் புதன்கிழமைகளில் மட்டும் மதுரை ரெயில்நிலையத்துக்கு ¾ மணி நேரம் தாமதமாக வந்தடையும்.

மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து அரைமணி நேரம் தாமதமாக நாகர்கோவில் புறப்பட்டு செல்லும்.

சென்னை–கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து அரைமணி நேரம் தாமதமாக கன்னியாகுமரி புறப்பட்டு செல்லும். கோவை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து அரைமணி நேரம் தாமதமாக நாகர்கோவில் புறப்பட்டு செல்லும். ஈரோடு, மயிலாடுதுறை– நெல்லை பாசஞ்சர் ரெயில் நெல்லை ரெயில் நிலையத்துக்கு சுமார் ¾ மணி நேரம் தாமதமா நெல்லை ரெயில்நிலையம் சென்றடையும்.

தாதர்–நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை ரெயில்நிலையத்துக்கு அரைமணி நேரம் தாமதமாக சென்றடையும்.

தாம்பரம்–நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் அரைமணி நேரம் தாமதமாக நெல்லை ரெயில்நிலையம் சென்றடையும். மும்பை–நாகர்கோவில் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் திங்கட்கிழமை, வியாழக்கிழமைகளில் நெல்லை ரெயில்நிலையத்துக்கு சுமார் அரைமணி நேரம் தாமதமாக சென்றடையும்.

நாகர்கோவில்–கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் இருந்து சுமார் 15 நிமிடம் தாமதமாக கோவை புறப்பட்டு செல்லும். நெல்லை–தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் திங்கட்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அரைமணி நேரம் தாமதமாக திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் இருந்து புறப்படும்.

மதுரை–திண்டுக்கல் பாசஞ்சர் ரெயில் திண்டுக்கல் ரெயில்நிலையத்துக்கு அரைமணி நேரம் தாமதமாக சென்றடையும். தூத்துக்குடி–ஓகா கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் இருந்து அரைமணி நேரம் தாமதமாக புறப்படும்.

நெல்லை– வைஷ்ணதேவி(ஹம்ஸபர் எக்ஸ்பிரஸ்) ரெயில் திங்கட்கிழமைகளில் அரைமணி நேரம் தாமதமாக திருச்சி ரெயில்நிலையம் சென்றடையும். நாகர்கோவில்–சென்னை எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமைகளில் திருச்சி ரெயில்நிலையத்துக்கு அரை மணி நேரம் தாமதமாக சென்றடையும். திருச்செந்தூர்–சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ரெயில்நிலையத்துக்கு அரைமணி நேரம் தாமதமாக சென்றடையும்.

ராமேசுவரம்–திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் திங்கட்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் திருச்சி ரெயில் நிலையத்துக்கு சுமார் அரைமணி நேரம் தாமதமாக சென்றடையும். நாகர்கோவில்–சென்னை சென்டிரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் திங்கட்கிழமைகளில் அரை மணி நேரம் தாமதமாக திருச்சி ரெயில்நிலையம் சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story