கரூர் மாவட்டத்தில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
கரூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரூர்,
காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதேபோல கரூரில் நேற்று காலை முதல் பலத்த மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால் கரூர் டவுன், தாந்தோணிமலை, வெங்கமேடு, வெள்ளியணை, பசுபதிபாளையம், ஆண்டாங்கோவில், சுக்காலியூர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையினால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சாலையில் நடந்து சென்றவர்கள் சிலர் மழையில் நனைந்தபடியும், குடைகளை பிடித்தபடியும் சென்றதை காணமுடிந்தது.
இதேபோல நச்சலூர், நெய்தலூர் காலனி, சேப்பிளாப்பட்டி, முதலைப்பட்டி, பொய்யாமணி, லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், புலியூர், உப்பிடமங்கலம், மணப்பாடி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலையில் இருந்து பரவலாக மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இருப்பினும் இந்த பகுதியில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story