பொன்.ராதாகிருஷ்ணன் அவமதிப்பு எதிரொலி: கூடலூரில் கேரள அரசு பஸ் சிறைபிடிப்பு - பா.ஜனதாவினர் 8 பேர் கைது
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சபரி மலையில் அவமதிப்பு செய்யப் பட்டதை கண்டித்து கூடலூரில் பா.ஜனதாவினர் கேரள அரசு பஸ்சை சிறைபிடித்தனர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்,
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரி மலைக்கு இருமுடி கட்டி சென்றார். அப்போது பாது காப்பு பணியில் இருந்த கேரள போலீஸ் அதிகாரிகள் அவரை காரில் செல்லவிடாமல் அவமதிப்பு செய்தனர். மேலும் ஊர் திரும்பும் போது மத்திய மந்திரியின் காரை மறித்து போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பா.ஜனதா வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கூடலூரில் பா.ஜனதாவினர் கேரள அரசு மற்றும் போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குமுளியில் இருந்து கம்பம் நோக்கி வந்த கேரள அரசு பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கேரள போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து அறிந்ததும் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச் சாமி, கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர் களை கலைந்து போகுமாறு எச்சரித்தனர். இதற்கு அவர் கள் மறுத்தனர். இதைத் தொடர்ந்து கூடலூர் நகர பா.ஜ.க தலைவர் ஜெயக் குமார் உள்பட 8 பேரை போலீ சார் கைது செய்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இது போன்ற சம்பவம் நடை பெறாமல் இருக்க கூடலூர் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்த கேரள போலீசை கண்டித்தும், கேரள அரசை கண்டித்தும் தேனி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பெரியகுளம் புதிய பஸ் நிலைய பிரிவு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தேனி நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் ராஜ பாண் டியன் தலைமை தாங்கினார். தொகுதி அமைப்பாளர் கணேஷ் குமார், நகர தலைவர் வேல்முருகன், ஒன்றிய தலை வர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப் பாட்டத்தில் கேரள அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப் பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் கள் குமார், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் அய்யப்பன் கோவிலுக்கு பாதயாத்திரை யாக சென்ற ஆந்திராவை சேர்ந்த பக்தர்களும் ஆர்ப்பாட் டத்தில் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story