நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். அப்போது விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதும் அதற்கு கலெக்டர் அளித்த பதில்கள் குறித்த விவரமும் வருமாறு:-
விவசாயி குணசேகரன்:- சங்கராபுரம் தாலுகாவில் உள்ள 22 கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட எந்தவொரு சான்றிதழையும் பொதுமக்கள் பெற முடிவதில்லை. உடனடியாக கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
கலெக்டர்: அரசுக்கு தெரிவித்து காலிப்பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்படும்.
விவசாயி முத்துமல்லா:- உரத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவந்தாடு கால்நடை மருத்துவமனையில் இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்கள் நடக்கிறது. இதை தடுக்க கால்நடை மருத்துவமனையை சுற்றிலும் மதில்சுவர் கட்ட வேண்டும்.
கலெக்டர்: உரத்தின் விலையை குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். சிறுவந்தாடு கால்நடை மருத்துவமனையை சுற்றிலும் மதில் சுவர் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி மணி:- நமது மாவட்டத்தில் அதிகளவில் சவுக்கு பயிர் செய்து வருகிறோம். அவற்றை வெளிமாநிலத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவே அதிகம் ஏற்படுகிறது. ஆகவே நமது மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும.
கலெக்டர்: காகித தொழிற்சாலை கொண்டு வருவது பற்றி விரைவில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
விவசாயி கலியமூர்த்தி:- மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சில இடங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து வரக்கூடிய வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் மூலம் போர்க்கால அடிப்படையில் உடனே அகற்ற வேண்டும். இதே கோரிக்கையை பெரும்பாலான விவசாயிகளும் தெரிவித்தனர்.
கலெக்டர்: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் மூலம் அகற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி கலியபெருமாள்:- ஆன்-லைன் மூலம் பட்டா மாற்றம் செய்ய காலதாமதம் ஏற்படுகிறது. அதை விரைந்து வழங்க வேண்டும்.
கலெக்டர்: கடந்த ஆண்டு 6 மாதத்தில் ஆன்-லைன் மூலம் பட்டா மாற்றம் செய்ய 1,200 விண்ணப்பங்கள் வந்தன. இந்த ஆண்டு கடந்த 6 மாதங்களில் 12 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதனால் பதிவு மூப்பு அடிப்படையில் விரைந்து பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்படும்.
விவசாயி முருகையன்:- புதுச்சேரி மாநிலம் அரியூர் பகுதியில் உள்ள கழிவுநீர், விழுப்புரம் மாவட்டம் நவமால்காப்பேரில் உள்ள ஏரியில் வந்து கலக்கிறது. அந்த ஏரி தண்ணீரை குடிக்கும் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இதுசம்பந்தமாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி ஏழுமலை:- குத்தகை எடுத்து கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வழங்குவதில்லை.
கலெக்டர்: வங்கி அதிகாரிகள் கூட்டம் நடத்தி கடன் வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், வேளாண் இணை இயக்குனர் சண்முகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கருணாநிதி, வேளாண் அலுவலர் சுரேஷ், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் காளிமுத்து, சிவராஜ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிங்காரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story