மாவட்டத்தில் தொடர் மழை: தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிநின்றது.
விழுப்புரம்,
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த 18-ந் தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோர பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்தது. தற்போது அது வலுவிழந்து உள்தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருப்பதால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பகல் வேளையில் மிதமான மழையும், இரவில் கனமழையாகவும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில் நேற்றும் 3-வது நாளாக மழை நீடித்தது. காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக சாரல் மழை பெய்தது. இருப்பினும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமத்துடன் குடைபிடித்தபடி பள்ளி- கல்லூரிகளுக்கு சென்றதை காண முடிந்தது.
விழுப்புரம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை தொடர்ந்து சாரல் மழை பெய்தது. அதன் பின்னர் சிறிது நேரம் மழை ஓய்ந்த நிலையில் 9.30 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது.
இந்த மழை இடைவிடாமல் ½ மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளான கணேஷ்நகர், கே.கே.நகர், கம்பன் நகர், சுதாகர் நகர், ஆசிரியர் நகர், மணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கிநின்றது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
பலத்த மழையால் விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. இதுபோல் ரெயில்வே மைதானம், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்திலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
உளுந்தூர்பேட்டை அருகே குச்சிப்பாளையம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் 10 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அவர்கள் அருகில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதேபோல் வண்டிப்பாளையம் கிராமத்திலும் 10-க் கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
மேலும் ஆண்டிக்குழி மற்றும் சேந்தமங்கலம் ஊராட்சியில் உள்ள விளை நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், பயிர்கள் மூழ்கியுள்ளன.
தொடர் மழையினால் சேந்தநாடு, மட்டிகை, விஜயங்குப்பம், வை.பாளையம் உள்ளிட்ட இடங்களில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது. அதுபோல் பெரும்பாலான ஏரிகளுக்கு செல்லக்கூடிய ஓடைகள் நிரம்பி அருகே உள்ள வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
விக்கிரவாண்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களான ஆவுடையார்பட்டு, கயத்தூர், சித்தணி, முண்டியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவில் விடிய, விடிய மழை பெய்தது. நேற்று காலையும் 11 மணி வரை பரவலாக சாரல் மழை பெய்தது.
இந்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கிரவாண்டி பெரியகாலனி பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையினால் வகாப் நகர், வீராங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மேலும் செஞ்சி, மேல்மலையனூர், திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. ஆனால் மாவட்டத்தின் கடலோர பகுதிகளான வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
நேற்றும் 3-வது நாளாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பலத்த மழையின் காரணமாக மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நேற்று 2-வது நாளாக உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏரிகள், குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. அதுபோல் மாவட்டத்தில் உள்ள வீடூர், மணிமுக்தா, கோமுகி ஆகிய அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 80 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக கள்ளக்குறிச்சியில் 24 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

Related Tags :
Next Story