கடலூரில் பலத்த மழை: கெடிலம், பெண்ணையாற்றில் தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன
கடலூரில் பலத்த மழை பெய்ததால் கெடிலம், பெண்ணையாற்றில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகி கடலூரை மிரட்டிய கஜா புயலானது, பலத்த மழையை அள்ளிக்கொடுத்து விட்டு திசைமாறி சென்றதால் மாவட்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏனெனில் தானேயால் புரட்டிப்போடப்பட்ட கடலூர் மாவட்டத்தில் அழிந்த முந்திரி மரங்களுக்கு பதிலாக விவசாயிகள் புதிதாக நட்டு வளர்த்த முந்திரி செடிகளை கஜா புயல் காவு கொண்டு விடுமோ என்று விவசாயிகள் பயந்திருந்தனர். ஆனால் நல்ல வேளையாக கஜா புயல் திசைமாறி சென்று விட்டது.
இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலூரில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை விடிய, விடிய மழை கொட்டியது. இதேப்போல் மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது.
கெடிலம் மற்றும் பெண்ணையாற்றங்கரையோர பகுதிகளில் பெய்த மழைநீரானது ஆறுகளில் கலந்ததால் கெடிலம் மற்றும் பெண்ணையாற்றில் மழைவெள்ளம் ஓடுகிறது. இதனால் பெண்ணையாற்றின் குறுக்கே புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதேபோல் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள திருவந்திபுரம் அணைக்கட்டும், கம்மியம்பேட்டையில் உள்ள தடுப்பணையும் நிரம்பி வழிகிறது. இந்த தடுப்பணைகளில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீரில் சிறுவர்களும், இளைஞர்களும் ஆனந்தக்குளியலிட்டதை காண முடிந்தது.
கடலூர் பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிவதால் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு கிட்டி உள்ளது.
மேலும் கடலூருக்குள் கடல் நீர் ஊடுருவியதால் நிலத்தடி உவர்நீராக மாறியிருந்த பகுதிகளில் நல்ல குடிநீர் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Tags :
Next Story