மத்தூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மத்தூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Nov 2018 4:00 AM IST (Updated: 24 Nov 2018 10:51 PM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தப்பட உள்ளது.

மத்தூர், 

மத்தூர் அருகே உள்ள மஜீத் கொல்ல ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. பேக்கரி மாஸ்டர். இவரது மனைவி நதியா (வயது 25). இவர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி யாழினி (1) என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நதியா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். நதியாவுக்கு திருமணத்தின்போது தருவதாக கூறியிருந்த 5 பவுன் நகையை அவரது பெற்றோர் இன்னும் தரவில்லை என்றும், இதை கணவர் வீட்டார் அடிக்கடி கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நதியா தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் நதியாவுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன் விசாரணை நடத்த உள்ளார்.

Next Story