மாரசந்திரத்தில், 165 பேருக்கு ரூ.45¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் பிரபாகர் வழங்கினார்
மாரசந்திரத்தில் 165 பேருக்கு ரூ.45 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.
குருபரப்பள்ளி,
குருபரப்பள்ளி அருகே உள்ள மாரசந்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
இந்த முகாமில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 132 மனுக்களை கொடுத்துள்ளர்கள். அந்த மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் வீடுகள், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும். டெங்கு, பன்றிகாய்ச்சல் போன்றவற்றில் இருந்து தங்களை காத்து கொள்ள குடிநீர் தொட்டிகளில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் 40 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 4 பேருக்கு விபத்து மரண உதவி தொகைக்கான ஆணைகள், 16 பேருக்கு உதவி தொகைக்கான ஆணைகள் உள்பட மொத்தம் 165 பேருக்கு ரூ.45 லட்சத்து 25 ஆயிரத்து 403 மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அன்பு குளோரியா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன் விஜயகுமார், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மரியசுந்தர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, இந்துமதி, துணை தாசில்தார் சந்தியா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தாசில்தார் சேகர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story