வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி, 2 பேர் மீது வழக்குப்பதிவு


வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி, 2 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 25 Nov 2018 3:45 AM IST (Updated: 25 Nov 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

திருப்பூர் அருகே உள்ள சிறுபோளுவாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மெல்வின் ஜோன் (வயது23). என்ஜினீயரிங் படித்துள்ளார். வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியதால், கோவையில் உள்ள தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தை அணுகினார். அதற்கு அந்த நிறுவனத்தினர் அயர்லாந்து நாட்டில் வேலை இருப்பதாகவும், அதற்கு கட்டணமாக ரூ.3 லட்சத்து 54 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்கள். இதன்பேரில் மெல்வின் ஜோன் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தினார்.

இதற்கிடையில் அந்த நிறுவனம், அயர்லாந்து நாட்டில் வேலை கிடைத்து இருப்பதாக கூறி அதற்கான பணி ஆணையை மெல்வின் ஜோனிடம் வழங்கியது. வெளிநாடு செல்வதற்காக உடல் தகுதி சான்றிதழ் பெறுவதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். இதற்கான மருத்துவ பரிசோதனை கட்டணமாக ரூ.12 ஆயிரம் செலுத்தினார்.

இதற்கிடையில் அந்த நிறுவனம் கொடுத்த பணி ஆணை போலியானது என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பணத்தை திருப்பி தருமாறு மெல்வின் ஜோன் அந்த நிறுவனத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் வேலை வாங்கித்தராமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் மோசடி செய்தனர். இதுகுறித்து கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து கோவை கே.கே.புதூரை சேர்ந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் பிரபாகரன், மேலாளர் வித்யாஸ்ரீ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story