தூத்துக்குடி அருகே ஆசிரியையிடம் சங்கிலி பறிக்க முயற்சி மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தூத்துக்குடி அருகே ஆசிரியையிடம் சங்கிலி பறிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே ஆசிரியையிடம் சங்கிலி பறிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தையல் ஆசிரியை
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மனைவி சுமதி (வயது 50). இவர் குலையன்கரிசலில் உள்ள தனியார் பள்ளியில் தையல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று மதியம் புதுக்கோட்டை பி.எஸ்.பி. பள்ளி அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், சுமதி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது சங்கிலி அறுந்தது.
11 பவுன் சங்கிலி தப்பியது
இதில் சுதாரித்துக் கொண்ட சுமதி, தங்க சங்கிலியை பிடித்துக் கொண்டார். அப்போது அங்கு பொதுமக்கள் வந்ததால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் 11 பவுன் தங்க சங்கிலி தப்பியது.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story