விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றது.
விழுப்புரம்,
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் உள்வாங்கப்படும் சிக்னல் பாயிண்ட் இடத்தில் நேற்று காலை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் சிக்னல் பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் ஈடுபட்டனர்.
காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை இந்த பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மற்றொரு பாதையில் ரெயில்கள் அனைத்தும் ரெயில் நிலையத்தினுள் உள்வாங்கப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், வழக்கமாக நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகள்தான் தற்போது நடந்து வருகிறது. அதேநேரத்தில் மழைக்காலம் என்பதால் சிக்னல் பாயிண்ட் சரியாக செயல்படுகிறதா? தண்டவாளம் உறுதித்தன்மையுடன் உள்ளதா? என்றும் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story