பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மரணம் மாரடைப்பால் உயிர் பிரிந்தது
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ்மாரடைப்பால்மரணமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அவருடைய உயிர் பிரிந்தது.
பெங்களூரு,
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ்மாரடைப்பால்மரணமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அவருடைய உயிர் பிரிந்தது.
நடிகர் அம்பரீஷ்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் அம்பரீஷ். ‘ரெபல் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார். இவர் தமிழ், கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், மத்திய மந்திரியாக பணியாற்றி இருந்தார். சித்தராமையாவின் மந்திரிசபையில் மந்திரியாக இருந்தபோது, வயது முதிர்வு காரணமாக அவர் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாகவும் அம்பரீஷ், தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், ஏற்கனவே சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்த மாதமும் அவர் சிங்கப்பூர் செல்ல இருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
மரணம்
பெங்களூருவில் உள்ள வீட்டில் இருந்த நடிகர் அம்பரீசிற்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை, மனைவி சுமலதா மற்றும் மகன் அபிஷேக் ஆகியோர் பெங்களூரு விக்ரம் மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நடிகர் அம்பரீஷ் நேற்று இரவு மரணமடைந்தார்.
இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நடிகர் அம்பரீஷ் மறைவு செய்தி கேட்டு கன்னட திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. இதற்கிடையே அம்பரீஷ் மறைவு பற்றி தகவல் அறிந்ததும் மந்திரிகள் டி.கே.சிவக்குமார், கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். இதேபோல, நடிகர்கள் புனித்ராஜ்குமார், யஷ் ஆகியோரும் மருத்துவமனைக்கு சென்றனர். அவர்கள் அம்பரீசின் மனைவி சுமலதாவுக்கும், அவருடைய மகன் அபிேஷக்கிற்கும் ஆறுதல் கூறினார்கள்.
மருத்துவமனை முன்பு திரண்ட ரசிகர்கள்
இதற்கிடையே அம்பரீஷ் மரணமடைந்தது பற்றி தகவல் அறிந்ததும் அவருடைய ரசிகர்களும், ஆதரவாளர்களும் மருத்துவமனை முன்பு திரண்டனர். அவர்கள் மருத்துவமனை முன்பாக நின்று கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதன்காரணமாக மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
அங்கு திரண்டிருந்த அம்பரீசின் ரசிகர்கள், அம்பரீசை பார்க்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார்கள். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், அம்பரீசின் ரசிகர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதன்காரணமாக அங்கு பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
கன்னட திரையுலகம் இரங்கல்
கன்னட நடிகர் சங்க தலைவராக இருக்கும் அம்பரீசின் மறைவுக்கு, கன்னட திரையுலகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா தொட்டஅரசினகெரே கிராமத்தில் பிறந்த நடிகர் அம்பரீஷ் இதுவரை 208 படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர் கடைசியாக ‘அம்பி நிமக்கு வயசாகிதே’ என்ற படத்தில் நடித்திருந்தார். இது தமிழில் வெளியான ‘பவர்பாண்டி’ படத்தின் ரீமேக் ஆகும்.
Related Tags :
Next Story