5 மாநில தேர்தலுக்கு பிறகு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் சித்தராமையா பேட்டி


5 மாநில தேர்தலுக்கு பிறகு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 25 Nov 2018 4:15 AM IST (Updated: 25 Nov 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

5 மாநில தேர்தலுக்கு பிறகு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மைசூரு, 

5 மாநில தேர்தலுக்கு பிறகு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

5 மாநில தேர்தலுக்கு பிறகு...

முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம் குறித்து அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். தெலுங்கானா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இந்த விரிவாக்கத்தின்போது, காங்கிரஸ் கட்சி சார்பில் காலியாக இருக்கும் 6 இடங்களும் நிரப்பப்படும். மந்திரிசபை விரிவாக்கத்துக்கு முன்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் விரிவாக ஆலோசனை நடத்தப்படும்.

காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி 6 மாதங்களை நிைறவு செய்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நான் நிபுணர் கிடையாது

அப்போது நிருபர் ஒருவர், கே.ஆர்.எஸ். அணையில் காவிரித்தாய் சிலை அமைத்தால் அணைக்கு ஆபத்து ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் சிலை அமைப்பது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி, நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாரே? என்று சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த சித்தராமையா, ‘நான் ஒன்றும் நிபுணர் கிடையாது. கே.ஆர்.எஸ். அணையில் சிலை அமைத்தால் ஆபத்து ஏற்படுமா? என்பது குறித்து எனக்கு தெரியாது. இந்த குழப்பத்துக்கு அரசு தீர்வு காணும்’ என்றார்.

Next Story