பூந்தமல்லியில் விடுதியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பூந்தமல்லியில் விடுதியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Nov 2018 3:45 AM IST (Updated: 25 Nov 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத் தகராறில் கணவர் தனது 2 குழந்தைகளுடன் தனியாக பிரிந்து சென்றதால், மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தவர் கல்பனா(வயது 25). மதுரையை சேர்ந்தவர். குடும்பத் தகராறில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருடைய கணவர் குமார்(29) தனது 2 குழந்தைகளுடன் தனியாக பிரிந்து சென்று விட்டார்.

இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த கல்பனாவை, சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த அவரது உறவினர், சென்னை அழைத்து வந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரை இந்த விடுதியில் சேர்த்தார்.

ஆனால் இங்கும் மன உளைச்சலில் இருந்து வந்த கல்பனா, நேற்றுமுன்தினம் இரவு விடுதியில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை நீண்ட நேரமாக அவரது அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி உரிமையாளர், கதவை திறந்து பார்த்தபோது கல்பனா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story