‘கஜா’ புயலால் சேதம் அடைந்த சர்தார் வேதரத்தினம் தொடங்கிய குருகுலம்
கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தால், சர்தார் வேதரத்தினம் தொடங்கிய குருகுலத்தில் மாணவிகளின் புத்தகங்கள், உடைகள் நாசமாகின.
வேதாரண்யம்,
‘கஜா’ புயலால் சர்தார் வேதரத்தினம், வேதாரண்யத்தில் தொடங்கிய கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இந்த பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவிகளின் புத்தகங்கள், உடைகள் நாசமாயின.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியை உப்பு சத்யாகிரக போராட்ட வீரர் சர்தார் வேதரத்தினம் தொடங்கினார். அப்போது ஒரே ஒரு மாணவி மட்டும் இந்த பள்ளியில் படித்தார். தற்போது இந்த பள்ளியில் 1200-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவிகளில் பெரும்பாலானோர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். மேலும் தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். ஆதரவற்ற மாணவிகள் இந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளின் வசதிக்காக விடுதி கட்டிடம், சமையல் கூடம், சாப்பாட்டு கூடம், கழிவறை போன்ற பல்வேறு கட்டிடங்கள் உள்ளன.
கஜா புயலில் சிக்கி இந்த பள்ளியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக விடுதி கட்டிடங்கள், மாணவிகள் சாப்பிடும் அறை, சமையல் கூடம், கழிவறைகள் அங்குள்ள கோசாலையில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் என 9 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த கட்டிடத்தின் மேல் போடப்பட்ட ஓடுகள் தூக்கி வீசப்பட்டன.
புயல் வீசிய போது பலத்த மழையும் கொட்டியதால் விடுதி கட்டிடத்தில் ஓடுகள் பறந்ததால் விடுதிக்குள் தண்ணீர் தேங்கியது. இதில் விடுதி கட்டிடத்தில் இருந்த மாணவிகளின் துணிகள் மற்றும் பள்ளி பாடப்புத்தகங்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து நாசமானது. இதனால் மாணவிகள் தற்போது பள்ளி வளாகத்தில் உள்ள மற்றொரு மாடி கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பள்ளியின் அறங்காவலர் கேடிலியப்பன் கூறியதாவது:-
கடந்த 16-ந் தேதி அதிகாலை ஏற்பட்ட புயலால் விடுதிக்கட்டிடங்கள் உள்பட 8 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. மாணவிகளை நாங்கள் பாதுகாப்பாக வேறு கட்டிடத்தில் தங்க வைத்திருந்ததால் எந்த சேதமும் ஏற்படவில்லை. மாணவிகளின் உடைமைகள் மற்றும் பள்ளி பாட புத்தகங்கள் ஆகியவை தண்ணீரில் நனைந்து சேதமடைந்துள்ளன. எனவே அரசு எங்கள் பள்ளியை புதுப்பிக்க போதிய அளவு நிதி உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story