வடலாவில் கொடூரம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது
வடலாவில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
வடலாவில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாலியல் வன்கொடுமை
மும்பை வடாலா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 3 வயது சிறுமியை சம்பவத்தன்று அந்த கட்டிடத்தில் வசித்து வரும் ஜெயேஷ் தோலஸ்(வயது19) என்ற வாலிபர் அழைத்து உள்ளார். சிறுமி வந்ததும் அவரும், அவரது நண்பர் சுபம் ஷட்கர்(18) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேர் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.
இதில், வேதனை தாங்க முடியாமல் சிறுமி அழுது இருக்கிறாள். அப்போது, அங்கு வந்த சிறுமியின் உறவினர் ஒருவர் இந்த கொடூரத்தை பார்த்து அவர்களிடம் இருந்து சிறுமியை மீட்டார்.
3 பேர் கைது
பின்னர் நடந்த சம்பவம் பற்றி சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மகளை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்றனர். அங்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதிபடுத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
15 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். கைதான வாலிபர்கள் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவர்களை வருகிற 28-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
Related Tags :
Next Story