கோலார், மாலூர் தாலுகாக்களில் 50 போலி கிளீனிக்கிற்கு ‘சீல்’ சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி
கோலார், மாலூர் தாலுகாக்களில் 50 போலி கிளீனிக்கிற்கு ‘சீல்’ வைத்து சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோலார் தங்கவயல்,
கோலார், மாலூர் தாலுகாக்களில் 50 போலி கிளீனிக்கிற்கு ‘சீல்’ வைத்து சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுகாதார துறை அதிகாரிகள் சோதனை
கோலார் மாவட்டத்தில் கோலார், மாலூர் தாலுகாக்களில் ஏராளமான போலி கிளீனிக்குகள் செயல்படுவதாக மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இந்த புகார்களின் பேரில் நேற்று ஒரே நாளில் மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஆனந்த் ரெட்டி தலைமையில் கோலார், மாலூர் தாலுகாக்களில் 50 கிளீனிக்குகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அதாவது, கோலார் தாலுகா வேம்கல், மாலூர் தாலுகாவில் தாயலூர், உத்தனூர், பையப்பள்ளி, ராயலமானதின்னே, பைரகூரு, எப்பனி, குடிபள்ளி, ஆவணி, காக்கிபுரா, காந்தராஜ் சர்க்கிள் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
50போலிகிளீனிக்கிற்கு ‘சீல்’
அப்போது, அந்த கிளீனிக்குகளில் டாக்டருக்கு படிக்காமல் 10-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த கிளீனிக்குகள் சுகாதார துறையிடம் உரிய அனுமதி வாங்காமல் போலியாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த 50 கிளீனிக்கிற்கும் சுகாதார துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் அந்த கிளீனிக்குகளில் இருந்த மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
பரபரப்பு
இதுகுறித்து மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஆனந்த் ரெட்டி கூறுகையில், கோலார், மாலூர் தாலுாக்களில் போலி கிளீனிக்குகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. இந்த புகாரின்பேரில் கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு 50 கிளீனிக்கிற்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த நோட்டீசுக்கு யாரும் பதில் அளிக்கவில்லை.
இதனால் இந்த 50 கிளீனிக்கில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவை போலி கிளீனிக்குகள் என்பது தெரியவந்தது. இதனால் அந்த கிளீனிக்குகள் ‘சீல்’ வைக்கப்பட்டன என்றார்.
இந்த சம்பவம் கோலார், மாலூர் தாலுகாக்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story