ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு: பிரேத பரிசோதனையில் உடலை பாதி தைத்த நிலையில் கொடுத்ததால் பரபரப்பு
மணப்பாறை அருகே ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனையின் போது பாதி தைத்த நிலையில் அடக்கம் செய்ய கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை,
மணப்பாறை அரசு மருத்துவமனையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தவர் ஒருவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து விட்டு தைக்காமல் அப்படியே கொடுத்து விட்ட சம்பவம் அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் கடந்த 21-ந் தேதி வையம்பட்டியை அடுத்த ஆசாத்ரோடு அருகே உள்ள ரெயில்வே கேட்டில் இருந்து சற்று தொலைவில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். திருச்சி ரெயில்வே போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியாமல் இருந்ததால் அவரது உடல் பிரேத பரிசோதனை கிடங்கில் 5 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மணப்பாறையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன மேடையில் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.
இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் முன் ரத்தம் வடியாமல் இருக்க பிளாஸ்டிக் பை போடப்பட்டிருக்கும். அதை அகற்றிய பின்னரே உடல் அடக்கம் செய்யப்படும். இந்நிலையில் அந்த பிளாஸ்டிக் பையை எரிவாயு தகன மேடையில் இருந்தவர் அகற்றிய பின்னர், உடலில் பிரேத பரிசோதனை செய்த பகுதி பாதி தைக்கப்பட்டு, மீதி தைக்கப்படாத நிலையில் குடல் வெளியே வந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கனவே இதுபோன்ற ஒரு உடல் தைக்காமல் சில மாதத்திற்கு முன் வந்த நிலையில் மீண்டும் இப்படி ஒரு உடல் பாதி தைத்தும், மீதி தைக்காமலும் அனுப்பி உள்ளனரே என்று வேதனை அடைந்ததோடு, உடனடியாக வாலிபரின் உடலை புதைத்து விட்டனர். ஆதரவற்ற நிலையில் இதுபோன்று யார் என்றே தெரியாமல் மரணமடைந்து விடுபவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் தைக்கப்படாமல் கொடுப்பதும், பாதி தைத்து விட்டு மீதியை தைக்காமல் கொடுப்பதும் சமூக ஆர்வலர்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ளதுடன் மனிதநேயத்தை மரித்துபோகச் செய்யும் செயலாக அமைந்துள்ளது. ஆகவே அதிகாரிகள் இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story