விமான சரக்கு பெட்டக நிறுவனத்தில் 372 வேலைவாய்ப்புகள்
இந்திய விமான ஆணைய நிறுவனம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என அழைக்கப்படுகிறது. இதன் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஒன்று ஏ.ஏ.ஐ.கிளாஸ் என்பதாகும்.
விமான சரக்குகளை கையாளும் நிறுவனமான இதில் தற்போது செக்யூரிட்டி ஸ்கிரீனர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 372 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மதுரை, திருப்பதி, புவனேஸ்வர் உள்பட பல்வேறு விமான தள அலுவலகங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. மதுரையில் 32 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு விமான தளங்களில் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
இந்த பணிகளுக்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன் என்.சி.சி. சான்றிதழ் அல்லது விமான நிறுவனத்தின் ஏவி.எஸ்.இ.சி. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்தி், ஆங்கிலம் மொழி அறிவு அவசியம். விண்ணப்பதாரர் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு சில பணியிடங்களுக்கு உடல் தகுதி சோதிக்கப்படும். எழுத்துத் தேர்வும், நேர்காணலும் நடத்தப்படும்.
விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர், பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தபால் முலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் The Chief Executive Officer, AAI Cargo Logistics & Allied Services Company Limited, AAI Complex, Delhi Flying Club Road, Safdarjung Airport, New Delhi -110 003 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 15-12-2018-ந் தேதியாகும்.
இது பற்றிய விவரங்களை http://aaiclas-ecom.org/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story