விசாரணைக்காக அழைத்து சென்ற வாலிபர்களை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகை
விசாரணைக்காக அழைத்து சென்ற 2 வாலிபர்களை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் நிலையத்தை உறவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பூந்தமல்லி,
இந்த நிலையில் நேற்று மதியம் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. அப்போது சரளாவின் கணவர் செல்வநாதன் வந்து சண்டையை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து காயம் அடைந்த சரளா, செல்வநாதன் ஆகிய 2 பேரும் ரத்தம் சொட்ட, சொட்ட திருவேற்காடு போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு பணியில் இருந்த போலீசார் 2 பேரையும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக விசாரிக்க ஜோஸ்பினின் கணவர் ராஜ்குமார், அவருடைய அண்ணன் ராஜேஷ் (30) ஆகிய 2 பேரையும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் போலீஸ் நிலையம் வரவழைத்தார்.
அப்போது அவர்கள் 2 பேரையும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராஜ்குமாரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவேற்காடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்குள் நுழையாத வண்ணம் போலீஸ் நிலையத்தின் இரும்பு கதவுகளை போலீசார் பூட்டினார்கள். பின்னர் அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், பூந்தமல்லி போலீஸ் உதவி கமிஷனர் செம்பேடு பாபு ஆகியோர் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தாக்குதல் நடத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என ராஜ்குமாரின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு, சம்பவத்தில் தொடர்புடைய இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை போலீஸ் ஜாமீனில் விடுவதாகவும், சப்-இன்ஸ்பெக்டர் 2 பேரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை வந்த பிறகு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ராஜ்குமாரின் உறவினர்கள் இதுகுறித்து கூறியதாவது:- 2 பெண்கள் சண்டை போட்டுக்கொண்டதற்காக வாலிபர்களை விசாரணைக்கு அழைத்து உடலில் உள்ள துணிகளை கழற்றி விட்டு அடிக்க வேண்டுமா? கடந்த ஆகஸ்டு மாதம் இதே திருவேற்காடு போலீசார் சரியாக விசாரணை செய்யவில்லை என்று கூறி ரேணுகா என்ற பெண், போலீஸ் நிலையம் எதிரே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதே போல் 2 நாட்களுக்கு முன்பு ஒருவர் உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்போது விசாரணை என்ற பெயரில் அழைத்து வந்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். இன்னும் இதுபோல் வெளியே வராமல் நிறைய சம்பவங்கள் உள்ளது. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் இந்த திருவேற்காடு போலீஸ் நிலையத்தை உயர் அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருவேற்காடு, கோலடி, அன்பு நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் ராஜ்குமார் (வயது 27). இவருடைய மனைவி ஜோஸ்பின். ராஜ்குமாருடைய வீட்டுக்கு கீழ் உள்ள வீட்டில் வசித்து வந்த சரளா என்பவருக்கும் ஜோஸ்பினுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

Related Tags :
Next Story