மாடியில் இருந்து விழுந்த மருத்துவ கல்லூரி மாணவி உயிருக்கு போராட்டம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


மாடியில் இருந்து விழுந்த மருத்துவ கல்லூரி மாணவி உயிருக்கு போராட்டம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 26 Nov 2018 10:00 PM GMT (Updated: 26 Nov 2018 7:37 PM GMT)

நாக்பாடாவில் மாடியில் இருந்து விழுந்த மருத்துவ மாணவி ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மும்பை,

மும்பை வில்லேபார்லேயை சேர்ந்த மருத்துவ மாணவி இலா ராய்கர்(வயது23). இவர் மும்பை சென்டிரலில் உள்ள நாயர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்து வருகி றார். நேற்று முன்தினம் இரவு மாணவி நாக்பாடா மதன்புரா பகுதியில் உள்ள நியூ அமின் மேன்சன் என்ற குடியிருப்பு கட்டிடத்துக்கு சென்று இருக்கிறார்.

அங்கு 2-வது மாடியில் நின்று கொண்டு இருந்த அவர், திடீரென மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். என்ன காரணத்துக்காக மாணவி அந்த கட்டிடத்துக்கு சென்றார்? அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் கீழே குதித்தாரா? என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக நாக்பாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story