கோவையில்: அரசு பஸ் மோதி வங்கி உதவி மேலாளர் பலி


கோவையில்: அரசு பஸ் மோதி வங்கி உதவி மேலாளர் பலி
x
தினத்தந்தி 27 Nov 2018 3:00 AM IST (Updated: 27 Nov 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் அரசு பஸ் மோதி வங்கி உதவி மேலாளர் பலியானார்.

கோவை,

கோவை கணபதி மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சஞ்சய் (வயது 30). இவர் பீளமேட்டில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருணமாகி 2½ வயதில் மகன் உள்ளார். சஞ்சய் நேற்றுக்காலை வீட்டில் இருந்து வங்கிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கோவை 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சஞ்சய் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கோவை கிழக்குப்பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சஞ்சய்யின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அரசு பஸ் தனியார் பஸ்சை முந்தி செல்ல முயன்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற சஞ்சய் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அரசு பஸ் டிரைவர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story