அந்தியூரில் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
அந்தியூரில் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும், வியாபாரிகளும் போராட்டம் நடத்தினார்கள்.
அந்தியூர்,
அந்தியூர் பஸ்நிலையம் அருகே கடந்த 200 ஆண்டுகளாக வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாட்டுச்சந்தையும், திங்கட்கிழமை வெற்றிலை ஏலம் மற்றும் மளிகை-காய்கறி சந்தையும் நடைபெற்று வருகிறது.
அந்தியூர் மற்றும் அதன் அருகே உள்ள சந்தியபாளையம், பிரம்மதேசம், எண்ணமங்கலம், அத்தாணி, செம்புளிச்சாம்பாளையம், பர்கூர் என 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இதேபோல் ஈரோடு மட்டுமின்றி வெளிமாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் தங்களுடைய மாடுகளை விற்க, வாங்க வருவார்கள். அதனால் வாரத்தில் 3 நாட்கள் சந்தை நடைபெறும் இடம் பரபரப்பாக காணப்படும்.
இதுதவிர ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் அந்தியூரை சுற்றியுள்ள மலைப்பகுதி விவசாயிகள் தங்களுடைய சிறுதானிய பயிர்களை விற்க கொண்டு வருவார்கள். இவைகளை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சரக்கு ஆட்டோக்களில் வந்து வாங்கிச்செல்வார்கள். சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள சந்தை நடைபெறும் இடத்திலேயே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சார்பதிவாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், ரேஷன் கடை மற்றும் தாசில்தார் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனால் சந்தை நடைபெறும் இடத்தின் பரப்பளவு சுருங்கிவிட்டது.
இதைத்தொடர்ந்து சந்தையை அந்தியூர் மலைகருப்பசாமி கோவில் அருகே உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் மாற்ற அரசு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கலெக்டர் கதிரவன், ராஜாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தாசில்தார் பாலகுமரன் மற்றும் பேரூராட்சி செயல் அதிகாரிகள் கடந்த 17-ந் தேதி மலைகருப்பசாமி கோவிலுக்கு சென்று சந்தையை இடமாற்றம் செய்ய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்தநிலையில் சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது என்று வியாபாரிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து நேற்று வாரச்சந்தையை நடத்தாமல் கறுப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதற்கு ஆதரவு தெரிவித்து சந்தை நடைபெறும் இடத்தில் ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு, சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கோஷம் எழுப்பினார்கள்.
மேலும் அதே இடத்திலேயே காலை முதல் மாலை வரை சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதுபற்றி போராட்டக்காரர்கள் கூறும்போது, ‘தற்போது சந்தை நடைபெறும் இடத்தில் போதுமான வசதி உள்ளது. மேலும் பஸ்நிலையம் அருகிலேயே இருப்பதால் வியாபாரிகளும், பொதுமக்களும் சந்தைக்கு எளிதாக வந்து செல்ல முடியும். மலைகருப்பசாமி கோவில் அருகே மாற்றினால், 2 பஸ்கள் மாறி செல்லவேண்டிய நிலை ஏற்படும்‘ என்றார்கள்.

Related Tags :
Next Story