குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்
குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி,
குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
அருவிகளில் கொட்டும் தண்ணீர்
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் பருவ மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சீசன் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களில் சாரல் மழை பெய்யும். ஆனால் தற்போது சாரல் மழை இல்லாமல் மிதமான வெயில் அடிக்கிறது. குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
அய்யப்ப பக்தர்கள்
இந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக தற்போது நடை திறக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் இந்த சீசனில் செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றாலம் வருவது வழக்கம். கோவிலுக்கு செல்லும்போதும், அங்கிருந்து வரும்போதும் அவர்கள் குற்றாலம் அருவிகளில் குளித்து செல்வார்கள்.
இந்த ஆண்டும் அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்துக்கு வர தொடங்கி உள்ளனர். நேற்று பக்தர்களின் வருகை சற்று அதிகமாக இருந்தது. அருவிக்கரைகளில் “சுவாமியே சரணம் அய்யப்பா“ என்ற சரண கோஷம் அடிக்கடி ஒலித்துக் கொண்டே இருந்தது. அனைத்து அருவிகளிலும் அய்யப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் நேற்று கார்த்திகை சோமவாரம் என்பதால் அதிகாலையில் இருந்து பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி அவர்கள் குற்றாலத்தில் சிறப்பு பூஜை செய்தனர்.
Related Tags :
Next Story