கொடைக்கானலில்: உறைபனியுடன் குளிர் சீசன் தொடக்கம்


கொடைக்கானலில்: உறைபனியுடன் குளிர் சீசன் தொடக்கம்
x
தினத்தந்தி 28 Nov 2018 3:00 AM IST (Updated: 27 Nov 2018 10:22 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில், உறைபனியுடன் குளிர்கால சீசன் தொடங்கியுள்ளது.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானலில் குளிர்கால சீசன் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை நிலவும். குறிப்பாக டிசம்பர் மாத இறுதியில், அதிகளவில் குளிர் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அதிகமான மழை பெய்துள்ளதால் குளிர் சீசன் முன்னதாகவே தொடங்கியுள்ளது.

கொடைக்கானலில் ‘கஜா’ புயலுக்கு பிறகு அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக குளிர் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நகர் பகுதியில் கடுமையான குளிர் காற்று வீசியது. இதனால் நேற்று காலையில் நகரில் உள்ள ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி போன்ற பகுதிகளில் உறைபனி நிலவியது. புல்வெளிகளில் வெண்பட்டு போர்த்தியது போல் பனி படர்ந்திருந்தது. உறைபனியால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதன்பிறகு பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவியது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. கடும் குளிர் நிலவியதால் பகல் நேரத்திலேயே பாதுகாப்பான உடைகளை அணிந்தபடி வந்தனர். மேலும் பகலில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றன.

இந்த நிலையில் பனிப்பொழிவால் பிரையண்ட் பூங்காவில் நடவு செய்த பூச்செடிகள் கருகி விடாமல் இருப்பதற்காக அவைகள் மீது பாலித்தீன் கவர்களை கொண்டு மூடும் பணி நடந்து வருகிறது.

Next Story