கும்மிடிப்பூண்டியில் கத்தி முனையில் தொழிலாளியிடம் வழிப்பறி; 5 பேர் கைது


கும்மிடிப்பூண்டியில் கத்தி முனையில் தொழிலாளியிடம் வழிப்பறி; 5 பேர் கைது
x
தினத்தந்தி 28 Nov 2018 3:15 AM IST (Updated: 27 Nov 2018 11:01 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் கட்டிட தொழிலாளியிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை கும்மிடிப்பூண்டி பஜார் வழியாக மோட்டார் சைக்கிளில் கவரைப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள துணை மின்நிலையம் அருகே நின்று கொண்டிருந்த 5 பேர், ஏழுமலையை கத்தி முனையில் வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.1000 பறித்து சென்றனர். இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் 5 பேரையும் மடக்கி பிடித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், அவர்கள் கவரைப்பேட்டையை அடுத்த அய்யர்கண்டிகை கிராமத்தை சேர்ந்த விஜய் (24), புதுகும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (24), தினேஷ் (22), உமாபதி (22), மணிகண்டன் (22) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமை யில் கும்மிடிப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார்.

Next Story