வருகிற நாடாளுமன்ற தேர்தலில்: அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - பொன்முடி எம்.எல்.ஏ. பேச்சு


வருகிற நாடாளுமன்ற தேர்தலில்: அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - பொன்முடி எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 28 Nov 2018 3:30 AM IST (Updated: 28 Nov 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று பொன்முடி எம்.எல்.ஏ. பேசினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மஸ்தான், மாசிலாமாணி, உதயசூரியன், சீத்தாபதிசொக்கலிங்கம், தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன்பிரசன்னா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தற்போதுள்ள அரசியலில் மக்களிடம் செல்வாக்கு உள்ள தலைவராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். மாற்று கட்சியினர் கூட, மு.க.ஸ்டாலின், முதல்- அமைச்சராக வர வேண்டும் என்று நினைக்கின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அதற்கான வியூகத்தை அமைக்க ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

ஆகவே நமக்குள் இருக்கிற கசப்புணர்வுகளை மறந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். கட்சி யாரை விழுப்புரம் தொகுதி வேட்பாளராக அறிவித்தாலும் அவரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும். எனவே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குறிப்பாக மகளிர் அணியினர் கிராமந்தோறும் திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், முத்தையன், மைதிலிராஜேந்திரன், நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டுராஜா, வேம்பிரவி, மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, பிரபாகரன், கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story