கஜா புயலுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க கோரி திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


கஜா புயலுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க கோரி திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2018 4:30 AM IST (Updated: 28 Nov 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலுக்கு முழுமையாக நிவாரணம் வழங்ககோரி கரூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கரூர் தாலுகா அலு வலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் குமாராசாமி தலைமை தாங்கினர். பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பு, ராசசேகரன் முன்னிலை வகித்தனர். இதில் அமைப்பாளர் குணசேகரன், நகர தலைவர் சதாசிவம், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அலெக்ஸ் உள்பட திராவிடர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கஜா புயலை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மேலும் தமிழக அரசு கோரிய நிவாரண தொகையை முழுமையாக மத்திய அரசு வழங்கிட வேண்டும். புயல் நிவாரண உதவிகளை அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் இணைத்து கொண்டு வழங்கிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தி கிராமப்புறங்களில் கிடப்பில் கிடக்கும் திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



Next Story