ஆலங்குடி, பொன்னமராவதி பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி அனுப்பி வைத்தார்
ஆலங்குடி, பொன்னமராவதி பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி அனுப்பி வைத்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வரப்பெற்ற நிவாரண பொருட்களை நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கலெக்டர் கணேஷ் ஆகியோர் புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிவாரண பொருட்கள் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் மறமடக்கி கிராமத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அரிசி, கொசுவர்த்தி சுருள், மெழுகுவர்த்தி, உடைகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் அடங்கிய 500 எண்ணிக்கையிலான நிவாரண பைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல பொன்னமராவதி பகுதிக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய 2 ஆயிரம் எண்ணிக்கையிலான நிவாரண பைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில், அரசு அலுவலர்களை கொண்ட குழு அமைத்து அவர்கள் மூலம் பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story