கஜா புயலால் 4 மாவட்டங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன பட்டுக்கோட்டையில், வைகோ பேட்டி
கஜா புயலால் 4 மாவட்டங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன என்று பட்டுக்கோட்டையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு வந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசலில் கஜா புயலினால் 120 அடி உயர மனோராக்கள் இடிந்து விழுந்ததைப் பார்வையிட்டு பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் சேதவிவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 3 நாட்களாக கஜா புயலினால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறேன். நாசகார கஜா என்கிற பேரழிவு புயலால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் பல புயல்களைப் பார்த்திருக்கிறேன். எந்த புயல் வந்தாலும் 1 மணி நேரத்திற்குள் போய்விடும். ஆனால் இந்த கஜா புயல் 5 மணி நேரம் அடித்து விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டது.
மீனவர்களுக்கு ரூ.40 லட்சம் செலவில் இரும்பினால் ஆன படகை அரசே வழங்க வேண்டும். தென்னை மரங்கள் அனைத்தும் விழுந்து விட்டன. ஒரு தென்னை மரத்திற்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் வந்து பார்த்துச் சென்றதால் நஷ்டத்தை கணிக்க முடியுமா? கீழே விழுந்த தென்னை மரங்களை பார்க்க முடியுமா? இனி விவசாயக் குடும்பங்கள் ஒரு தலைமுறைக்கு தலை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கஜா புயலால் தமிழகத்தில் 4 மாவட்டங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. தமிழ்நாட்டில் 1 லட்சம் விவசாய குடும்பங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு சிறப்பு திட்டத்தை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இன்றைய ‘தினத்தந்தி’ தலையங்கத்தைப் படித்தேன். சிறப்பு நிதியைக் கேளுங்கள் என்று சிறப்பாக எழுதி இருந்தார்கள்.
இன்றைக்கு வல்லபாய் படேலுக்கு உடகிலேயே உயரமான சிலை அமைத்து விட்டோம் என்று பிரதமர் மோடி காந்தியையும், நேருவையும் தரம் தாழ்ந்து பேசுகிறார். இந்த நாட்டுக்காக காந்தியை விட, நேருவை விட யார் தொண்டு செய்தார்கள்.
கஜா புயலால் ரொம்பவும் சந்தோஷப்படுபவர்கள் மோடியும், கார்ப்பரேட் நிறுவனங்களும்தான். 50 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர்கள், இன்றைக்கு சோறு வாங்க வரிசையில் நிற்பதை பார்த்தேன். கோடீஸ்வரராக இருந்தவர்கள் ஒரேநாளில் தெருவுக்கு வந்து விட்டார்கள். இந்த புயலில் போலீஸ்காரர்கள், மின்சார ஊழியர்கள், அதிகாரிகள், கலெக்டர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஆனால் அழிந்து போன விவசாயிகளின் கணக்கெடுப்புக்கு யாரும் வரவில்லை.
நடிகைகளுக்கு வரவேற்பு கொடுக்கும் நரேந்திர மோடி உதவி கேட்டுப்போன தமிழக முதல்-அமைச்சரை சந்திக்காமல் காக்க வைத்து விட்டார். 7 கோடி தமிழர்களின் முதல்-அமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்து விட்டார். எங்கெங்கோ பறந்து கொண்டிருக்கும் மோடி, தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராதது ஏன்?. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பட்டுக்கோட்டை அருகே உள்ள துறவிக்காட்டை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் தென்னந்தோப்பில் தென்னை மரங்கள் புயலால் அடியோடு சாய்ந்ததை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டதுடன், விவசாயிகளுடன் தரையில் அமர்ந்து அவர்களது கஷ்டத்தை பரிவுடன் கேட்டறிந்தார். பட்டுக்கோட்டை சிவக்கொல்லை தெருவில் புயலால் சுவர் இடிந்து இறந்த 4 பேரின் குடும்பத்திற்கு வைகோ ஆறுதல் கூறினார்.
வைகோவுடன் பட்டுக்கோட்டை நகரசபை முன்னாள் தலைவரும், ம.தி.மு.க. தீர்மானக்குழு உறுப்பினருமான ஜெயபாரதி விசுவநாதன், நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.

Related Tags :
Next Story